திருமாவளவன் தலைமையில் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீனவர் படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன் தினம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற் படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது இளைஞரின் படுகொலைக்கு நியாயம் கேட்டு தங்கச்சி மடத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இராமநாதபுரம் வந்துள்ளார்.

அவரை கீழக்கரை நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தங்கச்சி மடம் சென்ற கட்சியின் அனைத்து மட்ட மாவட்ட நிர்வாகிகளும் போராட்ட களத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களோடு கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம், சிவகங்கை மணடல செயலாளர் முகம்மது யாசீன், மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதீக், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் ரியாஸ் கான், கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது யாசீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நகர் செயலாளர் ஹமீது யூசுப், கட்சியின் நிர்வாகிகள் நெய்னா அசாருதீன், ஜெய்னுல் லாப்தீன், ஜகுபர் சாதீக் ஆகியோர் பங்கேற்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..