திராவிடத் தலைவர்கள் வரிசையில் மனித நேயம் போற்றிய வைகோ….

மதிமுக தலைவர் வைகோ பள்ளிவாசலுக்குள் நுழையும் முன்னர் இஸ்லாமியர்கள் போன்று கைகால்களை சுத்தம் செய்துவிட்டுச் சென்ற காட்சி அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் அறிமுகமும், வள்ளல் தன்மையும் கொண்ட தொழில் அதிபர், செய்யது குழுமத்தின் தலைவர், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் தாளாளர் பத்ஹூர் ரப்பானி மனைவி மஹமூதா அவர்கள் நேற்றைய தினம் காலமானதை தொடர்ந்து இன்று (01/03/2019) ஜனாஸா தொழுகை பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம் பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதில் பங்கேற்க பள்ளி வாசல் வரை நடந்தே வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை நேர அஸர் தொழுகை, மற்றும் ஜனாஸா தொழுகை இவை இரண்டிலும் கலந்து கொள்வதற்கு முஸ்லிம் பெருமக்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ஒழு செய்து கொண்டிருந்த காட்சியை கண்ணுற்றார்.

பின்பு தாமும் அது போல நேர்த்தியாக ஒளு செய்து கொண்டார்.அதன் பின்னர் முஸ்லிம் மக்களோடு பள்ளி வாசலில் அமர்ந்து, நின்று, தொழுகை நடந்தபோது அதிலும் பங்கேற்றார். அதன் பின்னர் ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்ற பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் மையவாடி வரை நடந்து வந்து மஹ்மூதா அவர்களின் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிறகுதான் சென்றார்.

திராவிட இயக்கத் தலைவர்கள் வரிசையில் மனித நேயம் போற்றும் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

#Paid Promotion