Home செய்திகள் ஆர்.எஸ் மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர் திறப்பு..

ஆர்.எஸ் மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர் திறப்பு..

by ஆசிரியர்

தமிழக முதல்வர் உத்தரவுப்படி இராமநாதபுரம் மாவட்ட பழைய ஆயக்கட்டு பகுதி – 3 க்கு விவசாய பயன்பாட்டிற்காக 14.11. 18 அன்று வைகை அணையிலிருந்து நொடிக்கு 17, 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகணையை 17.11. 18 இல் வந்தடைந்தது.

இதனடிப்படையில் பார்த்திபனூர் மதக ணையில் இருந்து பிரிந்து செல்லும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கணமாய்கள் சிவகங்கை மாவட்டத்தில் 15 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பார்த்திபனூர் மத கனணயில் இருந்து வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வலசை படுகை அணையை வந்தடைந்தது. இந்த தண்ணீர் கீழ்நாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ் .மங்கலம் பெரிய கண்மாய் குடிநீர் தேவைக்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் நொடிக்கு 350 கன அடி தண்ணீரை, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம். மணிகண்டன் இன்று (24.11.18 ) திறந்து வைத்தார். இதன்மூலம் கீழ் நாட்டார் கால்வாயில் அமைந்துள்ள 15 கண்மாய்கள் , ஆர்எஸ் மங்கலம் பெரிய கண்மாய் பெரிதும் பயன் பெறுகிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கீழ வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேங்கட கிருஷ்ணன் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!