பாம்பனில் கன மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கன மழை அடிக்கடி பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு (23.11.18) ராமேஸ்வரம், தங்கச்சிமடம் , பாம்பன், மண்டபம் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்தது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் கரையூர், நடராஜபுரம், பாம்பன், சின்ன பாலம் ஆகிய தாழ்வான பகுதிகளில் தேங்ய மழை நீர் அங்குள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள், கோயில், பள்ளி கட்டடம் ஆகியவற்ளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதியடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 .11.18 காலை 7 மணி நிலவரப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) ராமேஸ்வரம் – 226, தங்கச்சிமடம் 150 பாம்பன் – 152 , மண்ட்பம் – 94.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.