வாடிப்பட்டி தாலுகாவில்73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு..

வாடிப்பட்டி தாலுகாவில் 73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகாவில் 125 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 73 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருட்கள் பெற்று பயனாளிகளாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இதில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணி க்கைக்கு ஏற்றபடி 4 நாட்களில் நாளொன்றுக் கு 200 முதல் 250 குடும்ப அட்டைக ளுக்கு வில்லை கள் வழங்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிப்பட்டி பேரூராட்சியில் போடிநாயக்கன்பட்டி ரேஷன் கடையில் பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் ரூ. ஆயிரம், கரும்பு ஆகியவற்றை வழங்கி தொடக்கி வைத்தார். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி,கவுன்சிலர்கள் ஜெயகாந் தன், கார்த்திகா ராணி மோகன்,விவசாய சங்க தலைவர் கஜேந்திரன், கூர்மையா, குப்புசாமி, எம்.எஸ். முரளி, தங்கராhஜ், முன்னாள் கவுன்சிலர் சேகர் உட்பட கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி .காளமேகம்