வாடிப்பட்டி அருகே செம்மணிபட்டியில்தி.மு.க.ஆலோசனைக்கூட்டம்.!

வாடிப்பட்டி அருகே செம்மணிபட்டியில் தி.மு.க.ஆலோசனைக்கூட்டம்.!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் திறப்புவிழா மற்றும் இளைஞரணி 2வதுமாநில மாநாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் செம்மினிப்பட்டி திருமணமண்டத்தில்நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், பேரூர்செயலாளர் மு.பால்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைசெயற்குழுஉறுப்பினர் சேகர், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நல்லதம்பி ,துணை அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் அயூப்கான், அயலக அணி மாவட்டஅமைப்பாளர் கார்த்திக், பங்களா சி.மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி எல்.எஸ்.அய்யாவு, நாச்சிகுளம்பாஸ்கரன், சிதம்பரம், தகவல்தொழில்நுட்பஅணி தொகுதிஅமைப்பாளர் ஒன்றியகிளைசெயலாளர்கள், இளைஞரணியினர் உள்பட பிறஅணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர், வி.காளமேகம்