
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் எதிரே மதுரை, ராமேஸ்வரம் கன்னியாகுமரி,ராஜபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பேருந்து நிறுத்திலிருந்து பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் வருவதால் வெகுநேரமாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடையில் மின்விளக்குகள் இல்லாததால் பயணிகள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் பேருந்துக்கு காத்திருக்கும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் உசிலம்பட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேரம் என்பதால் பெண்கள் அந்த பகுதிகளில் நடமாட முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் அதிகம் நடைபெறுதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடை கட்டடிடத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.