Home செய்திகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் தொடர்மழையால் அழுகி சேதம், இன்சூரன்ஸ் கூட இல்லை என்பதால் கண்ணீரில் தத்தளிக்கும் உசிலம்பட்டி விவசாயிகள்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் தொடர்மழையால் அழுகி சேதம், இன்சூரன்ஸ் கூட இல்லை என்பதால் கண்ணீரில் தத்தளிக்கும் உசிலம்பட்டி விவசாயிகள்.

by mohan

விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உந்துதலின் அடிப்படையில் பயிரிடபட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் அழுகி சேதம், இன்சூரன்ஸ் கூட இல்லை என்பதால் கண்ணீரில் தத்தளிக்கும் உசிலம்பட்டி விவசாயிகள்.வெங்காயம் என்றாலே வருடத்திற்கு ஒரு முறை விலை உயர்வால் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு உணவு பொருளாக உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த உற்பத்தியை பெருக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு மானிய அடிப்படையில் வெங்காயம் வழங்கப்பட்டு பயிரிடப்பட்ட சூழலில்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.குறைந்த நாள் சாகுபடி என்றாலும் தற்போது பருவமடைந்து காய்கள் வைக்கும் தருவாயில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் விலை நிலங்களில் மழைநீர் தேங்கி வெங்காய பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமாகியுள்ளது.குறிப்பாக உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர், நல்லுத்தேவன்பட்டி, பேரையூர், சந்தையூர், பாறைப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் இந்த மழை பாதிப்பில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் தற்போது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் அரசு இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் வெங்காயத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கூட வழங்கப்படுவதில்லை என்றும் பல்வேறு விவசாய பயிர்களை விட விரைவில் அழுகி விவசாயிகளை நஷ்டமடைய வைக்கும் வெங்காயத்திற்கு இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது, மற்ற மாவட்டங்களில் இன்சூரன்ஸ் இருந்தாலும் மதுரை மாவட்டத்தை புறக்கணிப்பது ஏன் என்றும் தமிழக அரசு உரிய ஆய்வு செய்து மழையால் பாதிப்படைந்த வெங்காய பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்.அவ்வாறு செய்தால் மட்டுமே வேளாண்த்துறை மூலம் வழங்கப்படும் அறிவுரைகளுக்கு ஏற்ப பயிரிட்டு லாபம் பார்க்க விவசாயிகள் முன்வருவார்கள் என்றும், அடுத்தடுத்து விவசாயிகள் சோர்வடையாமல் தொடர்ந்து வெங்காயத்தை பயிரிட்ட வழி வகை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!