
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரும்பாலான கிராமங்கள் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளன.இக்கிராமப் பகுதிகளை வனத்துறையினர் காப்புக்காடுக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்து இருப்பதால் அப்பகுதி தனியார் நிலங்களை தனிமனை அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் உள்ளது.இதனால் 21 சென்ட்டுக்கு குறைந்த தனி மனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இதனை நீக்க கோரி பத்திரபதிவு எழுத்தர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..கடந்த 2018முதல் நகர ஊரமைப்பு அங்கீகாரம் பெற்ற தனிமனைகள் மட்டும் பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் கிராமப்பகுதி மனைகளின் பத்திரப்பதிவு நடைபெறவில்லையெனவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்;;ளதாகவும் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.