கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு காதலி அனுஷாவை தினம்தினம் பேச வையுங்கள் என சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் பாண்டியர் காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் ஒருவர் முகவரி குறிப்பிடாமல் கடிதம் எழுதி வருகிறார்.இன்று பக்தர் வெங்கடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் முன்பகுதியில் “தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள்.” என்று எழுதப்பட்டிருந்தது., அதுமட்டுமல்லாமல் கடிதத்தில் “அம்மை அப்பா சரணம் மதுரை நாடார் பெண் அனுஷாவை உடனே என் உடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள் வெங்கடேசன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகம் தெரியாமல் வெங்கடேசன் என்ற பெயரில் தினமும் கடிதம் எழுதி அனுப்பி வைத்த அந்த நபர் யார்.? எந்த பகுதியை சேர்ந்தவர்.? என்ற விவரம் தெரியாமல் கோவில் நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர். கடவுளுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தனது காதலியை தினம்தினம் தன்னுடன் பேச வையுங்கள் என்று எழுதப்பட்டிருப்பது பார்ப்போரை முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..