கருக்கட்டான்பட்டி கண்மாயில் தன்னார்வ இளைஞர்கள் உதவியுடன் மரம் நடும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்டது கருக்கட்டாண்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது.இக்கண்மாய் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து மாசுபட்டிருந்தது.இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட 58 கிராம இளைஞர் குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்மாயை சீரமைக்க முறையாக அனுமதி  பெற்று கருக்கட்டாண்பட்டி கண்மாயைச் சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞா்கள் சீரமைத்தனர்.சீரமைத்ததோடு மட்டுமல்லாமல் கண்மாய்க்கரையைச் சுற்றிலும் 10 அடி உயரமுள்ள வேம்பு ஆலமரம் அரசமரம் புளியமரம் உசிலை மரம் போன்ற 150 கற்கும் மேற்பட்ட பெரிய  மரங்களை கண்மாய்க்கரையைச் சுற்றிலும் நட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான துவக்க விழாவில் உசிலை  ஒன்றிய சேர்மன் ரஞ்சனி சுதந்திரம்,   குழு, உசிலை ரோட்டரி சங்கத்தின் தலைவர் உதயக்குமாா் மற்றும் நிர்வாகிகள், தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த சியாமளா தேவி பெரியார் பாசறை இளைஞர்கள், அக்னி சிறகுகள் அறக்கட்டளை நண்பர்கள், ஊர் இளைஞர்கள் பலரும்  பங்கேற்று மரங்களை நட்டு வைத்தனர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..