அசாம் அரசை கண்டித்து ராமநாதபுரம் தமுமுக ஆர்ப்பாட்டம்

அசாம் போலீசாரின் அடக்கு முறையை கண்டித்து ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே தமுமுக சார்பில் நடந்தது.அசாமில் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தலின்போது விவசாயிகள் மீது போலீசார் செப்.23 ல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்த போது 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹமது சபிக் கிராத் ஓதினார். தமுமுக-மமக மாவட்ட தலைவர் சரிப் தலைமை வகித்தார். மமக நகர் செயலாளர் முகமது அமீன் வரவேற்றார். தமுமுக பேச்சாளர் முஜாஹித் ஆலிம்,தமிழ் புலிகள் அமைப்பு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரஞ்சித், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றி கூறினார். தமுமுக மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், தமுமுக நகர் செயலாளர்முகமது தமிம், மாவட்ட ஊடக அணி செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..