பாலியல் தொந்தரவளிப்பதாகக் கூறி பெண் மகளிர் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழமாதரையைச் சேர்ந்தவர் சிவமுருகன்.விவசாயி. இவருடைய மனைவி பிரியதர்ஷிணி (35)..இவர்களுக்கு 7வயதில்;; ஒரு மகள் உள்ளார். இதே ஊரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் கோபால் (55.விவசாயி.இருவரும் ஓரே தெருவில் வசித்து வருகின்றனர்.பிரியதர்ஷிணிக்கு கோபால் அடிக்கடி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து சிவமுருகன் கோபாலிடம் தட்டிக்கேட்ட பொழுது கோபால் சிவமுருகனைத் தாக்கியுள்ளார்.இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் தன் மனைவிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும் தட்டிக்கேட்ட தன்னை தாக்கியது குறித்தும் சிவமுருகன் நேற்று புகார் அளித்துள்ளார்.ஆனால் போலிசார் கோபாலை கூப்பிட்டு விசாரிக்காமல் காலதாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்ஷிணி தனது குடும்பத்துடன் உசிலம்பட்டி அனைத்;து மகளிர் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார்.அங்கிருந்த போலிசார் மண்எண்ணை பாட்டிலை பறித்து பிரியதர்ஷிணியை காப்பாற்றி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.பாலியியல் தொந்தரவால் பெண் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால்; அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..