
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குபதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது.வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமதலைவர், கிராம வார்டு கவுன்சிலர், ஒற்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.இன்று கடைசிநாளான 22-ம் தேதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருவலம் அடுத்த ஸ்ரீபாதநெல்லூர் சித்தமருத்துவர் அதிசய நாதனின் மகள் தீபா எழிலரசி வெப்பாலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் சாமு உள்ளார்.
You must be logged in to post a comment.