
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி கே மூக்கையா தேவரின் 42 ஆவது நினைவு தினம் நடைபெற்றது, இதில் பல்வேறு கட்சியினர் மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதன் ஒரு பகுதியாக தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் சங்கிலி தலைமையில் மறைந்த மூக்கையா தேவர் நினைவிடத்தில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உடன் மாநில இளைஞரணி செயலாளர் அலெக்ஸ்,மாநில சிறுபான்மை அணி தலைவர் ரபீக்பாய், மதுரை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மருதுஜி, மற்றும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் சேதுராமன், மது, நடராஜன், சங்கர், விஜயகுமார், விக்கி தேவர், மதன், தங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
You must be logged in to post a comment.