நீர்நிலைகளில் தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் பொருட்டு உசிலம்பட்டி அருகே 7 குளங்களில் தாமரைச் செடியை நட்டு வைத்த தன்னார்வலர்கள்.

இயல்பாகவே மருத்துவ குணமிக்க தாமரைச் செடியை குளங்கள் ஊரணிகள் வீடுகளில் வளர்ப்;பதால் கொசு உற்பத்தியாவது மற்றும் நீர் ஆவியாவது தடுக்கப்படுககிறது.மேலும் நீர்நிலைகள் மாசுபாட்டைக் குறைக்கிறது.இத்தகைய மருத்துவ குணமிக்க தாமரைச் செடிகளை உசிலம்பட்டியைச் சேர்ந்த தேவகி சுரேஷ் என்ற தன்னார்வலர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.தற்போது மழை பெய்து உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள குளம் ஊரணி கண்மாய்கள் போன்றவை ஓரளவு நிரம்பியுள்ள நிலையில் இதனை கிராமப் பகுதிகளிலுள்ள ஊரணி குளத்தில் வளர்த்திட முடிவு செய்தார்.

இது குறித்து உசிலம்பட்டி பகுதியிலுள்ள 58 கிராம இளைஞர்கள் குழுவின் சௌந்திரபாண்டியனை அணுகிய போது அவரின் முயற்ச்சியால் தற்போது கிராமப்பகுதிகளில் மழை பெய்து நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளை தேர்ந்தெடுத்தனர்.இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள இராஜக்காபட்டி எருமார்பட்டி மானூத்து ஆகிய ஊராட்சிகளிலுள்ள 7 குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி ஊராட்சிமன்றத்தலைவர் ஒப்புதலுடன் 7 குளங்களிலும் தாமரைச் செடிகள் நடப்பட்டன.இதனை அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் சித்ரா பால்ராஜ் சந்திரா பாண்டி சின்னச்சாமி ஆகியோர் நட்டனர்.உடன் தன்னார்வலர் தேவகி சுரேஷ் சௌந்திரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.நீ;ர் நிலைகளை காத்திடும் முயற்ச்சியில் இறங்கியுள்;ள தன்னார்வலர்களை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

உசிலை சிந்தனியா