உசிலம்பட்டியில் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இன்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் கலைஞர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 3ம்ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல் உசிலம்பட்டி திமுக ஒன்றியம் சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் திமுகவினர் கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதே போல் உசிலம்பட்டி திமுக நகர் கழகம் சார்பில் நகர செயலாளர் தங்கமலைபாண்டியன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

உசிலை சிந்தனியா