உசிலம்பட்டி – ஆங்கில புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை தலைகீழாக எழுதி சாதனை படைத்த முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இந்தியா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய அக்கினி சிறகுகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 200 பக்கத்தை தலைகீழாக எழுதி சாதனை படைத்த இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் கணேசன் (51) என்பருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை இயற்கை வள பாதுகாப்பு குழு மாணவ மாணவிகள் வரவேற்புரையாற்றினர். இக்கல்லூரியின் முதல்வர் ரவி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி நிர்வாக குழுவினர் முன்னிலையில் சாதனை படைத்த முன்னாள் மாணவர் கனேசனுக்கு கல்லூரி நிர்வாக குழு சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பி.கே.எம் அறக்கட்டளை நிர்வாகிகள் புலவர்சின்னன், ஜெயராஜ், ராஜா சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் அவருடைய சாதனை குறித்து பேராசிரியர்கள், மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.அதனைதொடர்ந்து சாதனை படைத்த முன்னாள் மாணவர் கனேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலில் 200பக்கங்களை கொண்ட அப்துல்கலாமின் புத்தகத்தை எழுதி சாதனை படைத்து வேல்ர்டு ரெக்காட்க்கு அனுப்பி சாதனை படைத்துள்ளதாகவும், அதற்கு பின் தற்போது கிண்ணஸ் சாதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். விரைவில் கிண்ணஸ் சாதனைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..