செங்கம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 8.5 டன் ரேஷன் அரிசியை திட்டமிட்ட நுன்னறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு சாவல்பூண்டி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் செந்தில் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து அதனை கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சென்னை காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் சரக காவல் ஆய்வாளர் செல்வம் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆகியோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் அப்போது நூற்றுக்கணக்கான மூட்டைகளில் சுமார் 8.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசார் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு காவல் ஆய்வாளர் ரேகாமதியிடம் ஒப்படைத்தனர் ரேஷன் அரிசி களை டன் கணக்கில் பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்துவந்த குமார் தப்பி ஓடினார் இதனையடுத்து குமாருக்கு வீடு வாடகை கொடுத்த செந்தில் என்பவருக்கும் இதில் தொடர்பு உண்டா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அப்பகுதியில் 8.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.