Home செய்திகள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ,அமமுக கவுன்சிலர்கள் நகர்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ,அமமுக கவுன்சிலர்கள் நகர்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முதல் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத்தலைவர் சகுந்தலா தலைமை வகிக்க நகராட்சி ஆணையாளர் முத்து முன்னிலை வகித்தார்.மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரி வீட்டு வரி உயர்வைக் கண்டித்து எத்pர்ப்பைக்காட்டும் விதமாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்து வந்திருந்தனர்.மேலும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன் கோஷங்களை எழுப்பினர்.இதனால் நகராட்சி அலுவலகத்தின் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.இதில் அதிமுக கவுன்சிலர்கள்  அமமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

உசிலம்பட்டி நகராட்சியின் முதல் நகர் மன்றக் கூட்டத்திலேயே அதிமுக அமமுகவினர் புறக்கணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதுபெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்றதால் நகர்மன்றக்கூட்டம் நடைபெற்றது.தெரு விளக்கு சாலை வசதி போன்றவைகளுக்கு அவசரச் செலவினங்களுக்காக நிதி ஒதுக்குவது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உசிலை  சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com