Home செய்திகள் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

by mohan

மதுரை தோப்பூரில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இதில் ,தினசரி நூற்றுக்கும் அதிகமான லாரிகளில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. முறையாக, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்காமல் ,தார்ப்பாய் மூடி வைக்காமல், நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து மூளை கட்டி உள்ளது. மேலும், லாரிகளில் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கட்டாமல் வெறும் கயிறுகள் மட்டும் கட்டி திறந்த வெளியில், உள்ளது .வெப்ப சலனம் காரணமாக, மதுரைமா நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், சுமார் நூற்றுக்கும் அதிகமான லாரிகள் கப்பலூர் சர்வீஸ் சாலையில் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தது.மேலும், மழை பெய்தாலும், லாரியில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி போனது பலநாள் பாடாய் பட்டு விவசாயிகள் ஒரு நெல் மணித்துளிகளும் வீணாவதைக் கண்டு அப்பகுதி மக்கள் மன வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக ,நெல் மூட்டைகளை தார்பாய் போட்டு முறையாக மூடி பத்திரப்படுத்த வேண்டும் என்பதும், மேலும், லாரிகளில் கொண்டு வரும் போது கட்டாயமாக நெல் மூட்டைகள் தார்பாய்கள் வைத்து அடைத்து இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியம் சில நாளில் பஞ்சத்துக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.மதுரை மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில், இதுபோன்று, நெல் மூடைகள் தார்ப்பாய் இன்றி, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில், மழையில் நனைந்தபடி நெல் மூட்டைகள் சேதம் ஆக வாய்ப்புள்ளது. ஆகவே ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் மூடைகளை பாதுகாப்பாக வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com