Home செய்திகள் உசிலம்பட்டி அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் – விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைத்த நெல்மணிகளால் விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டி அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் – விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைத்த நெல்மணிகளால் விவசாயிகள் வேதனை

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தற்போது கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

நெல் மணிகளும் நன்கு விளைந்துள்ள சூழலில் கடந்த ஒரு மாதமாக அறுவடை பணிகளும் துவங்கியுள்ளது.இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யாத சூழலில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் விவசாயிகள் குவியல்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.தற்போதைய ஊரடங்கு நேரத்தில் வியாபாரிகளும் அதிகம் வருவதில்லை என்றும் வரும் ஒருசில வியாபாரிகளிலும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் சூழலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நெல் மணிகள் விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com