Home செய்திகள் உசிலம்பட்டியில் கொரோனா முழுஊரடங்கில் பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் 4 வயது சிறுவன்.

உசிலம்பட்டியில் கொரோனா முழுஊரடங்கில் பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் 4 வயது சிறுவன்.

by mohan

மிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.பொது மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் கடைகள் எதுவும் திறக்கப்படாததாலும் தெருவில் வசிக்கும் ஆதவற்றோர் முதியவர்கள் பசியால் வாடுகின்றனர்.

இதனைக் கண்ட உசிலம்பட்டி நாடார் புதுத் தெருவில் வசிக்கும் லஷ்வின் என்ற 4 வயது ஆதவற்றோருக்கு உணவு அளிப்பதை தனது வழக்கமாக்கியுள்ளான்.இதற்காக மதிய வேளையில் தன் தாய் சமைப்பதை பொட்டலங்களாக கட்டி பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் வசிக்கும் ஆதவற்றோர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கி வருகின்றான்.ழுழு ஊரடங்கு முடியும் வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க உள்ளதாகவும் தன்னுடைய மழலைத்தமிழிலில் தெரிவித்தான் லஷ்வின். விளையாட்டு மோகத்தில் மூழ்கும் இக்கால சிறுவர்கள் மத்தியில் விவரவமறியாத வயதிலேயே உதவும் எண்ணம் கொண்ட இச்சிறுவன் உண்மையில் பாராட்டுக்குரியவன்தான்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!