Home செய்திகள் கடையில் பூட்டை உடைத்து திருடியது மட்டுமல்லாமல் கடையிலிருந்த புதுப்பூட்டைக் கொண்டு திருடன் கடையை பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் உசிலம்பட்டியில் அரங்கேறியுள்ளது.

கடையில் பூட்டை உடைத்து திருடியது மட்டுமல்லாமல் கடையிலிருந்த புதுப்பூட்டைக் கொண்டு திருடன் கடையை பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் உசிலம்பட்டியில் அரங்கேறியுள்ளது.

by mohan

கடையை கொள்ளையடிப்பதில் பலரகம் உண்டு.ஆனால் எதுமாறியும் இல்லாத புது ரகமாய் பூட்டை உடைத்து கடையில் கொள்ளையடித்து விட்டு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புது பூட்டை வைத்து கடையைப் பூட்டி விட்டுச் சென்ற ருசிகர சம்பவம் உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் அசோக்ராஜா(35).இவர் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் பழைய தாலுகா ஆபிஸ் எதிரில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிங்கப்பூர் ஷாப்பிங் என்ற பெயரில் குறைந்த விலையில் செல்போன் உள்பட வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்கள் வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கடைக்கு இரண்டு பக்கம் கதவு உள்ளது.இந்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடையை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.இக்கடையில் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் உசிலம்பட்டி அருகே நல்லபெருமாள்பட்டிளைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி(28)

.கொரோனா ஊரடங்கால் கடையை மூடிவிட்டு வீட்டிலிருந்தவர் இன்று சில மருந்துகள் வாங்குவதற்காக உசிலம்பட்டிக்கு வந்தவர் தனது கடையையும் பார்த்து விட்டுச் செல்லலாமே என கடைக்குத் தெருவுக்கு வந்துள்ளார்.அப்பொழுது தான் ஊரடங்கிற்கு முன் பூட்டிய பூட்டு இல்லாமல் வேறு பூட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு தன்னுடைய ஓனருக்கு போன் செய்து இதுபற்றிக் கேட்டுள்ளார்.நான் பூட்டை மாற்றவில்லையே எனக் கூறிய உரிமையாளர் அசோக்குமார் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி உசிலம்பட்டிக்கு வந்துள்ளார்.கடையில் பூட்டு மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலிசார் கடையின் மற்றொரு பக்க ஷட்;டரை திறந்து சோதனை செய்ததில் கடையிலிருந்த செல்போன் உள்பட முக்கிய அழகுசாதனப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதன் மதிப்பு ரூ1.30லட்சம் (1லட்சத்து 30ஆயிரம்) ஆகும்.மேலும் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் திருடியபின் வெளியில் யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூட்டை எடுத்து பூட்டி விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.இதைப் பார்த்த கடைக்காரருக்கும் மட்டுமல்ல அங்கிருந்த போலிசாருக்கும் லேசாக மயக்கம்தான் வந்தது.முழு ஊரடங்கு சமயத்தில் பூட்டை உடைத்து திருடியது மட்டுமல்லாமல் விவரமாக பூட்டையும் மாற்;றிச் சென்ற விவ(கா)ரமான திருடன் குறித்து உசிலம்பட்டி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலைசிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!