Home செய்திகள் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்து வருகிறன்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான கீழப்புதூர், மேலப்புதூர், பங்களாமேடு, கவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 8பேருக்கு கொரோனா தொற்றும், இன்று காலை நிலவரப்படி கவணம்பட்டியில் 60வயதான மூதாட்டி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு தடுக்கும் விதமாக உசிலம்பட்டி நகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவுப்படி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் ஆலோசனையின் படி நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் அறிவுறுத்தலின்படி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர்,சரவணபிரபு முன்னிலையில் மேற்பார்வையாளர்கள் பாண்டி,தங்கபாண்டி மற்றும் மாலதி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாகனம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர். மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கசவம் அணிந்து செல்லுமாறு நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உள்ள கொரோனா வார்டிலும, தேனி மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா வார்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com