Home செய்திகள் உசிலம்பட்டி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற ரூ.1லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்.

உசிலம்பட்டி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற ரூ.1லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்.

by mohan

தமிழகத்தில் வருகிற ஏப்ரல்6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடு செய்வதை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்துவருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரும் ,போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த பொற்கொடி(56) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1லட்சம் ரொக்கப் பணத்தை (500ரூபாய் தாள்) காரில் எடுத்து சென்றது தெரியவந்தது.தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்;து உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதனைதொடர்ந்து வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பணத்தை எண்ணி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பொற்கொடியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com