Home செய்திகள் உசிலம்பட்டியில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற கொட்டும் மழையிலும் நீண்ட தொலைவிற்கு காத்திருந்த கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்கள்.

உசிலம்பட்டியில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற கொட்டும் மழையிலும் நீண்ட தொலைவிற்கு காத்திருந்த கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்கள்.

by mohan

தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் தினத்தையொட்டி கட்டுமான நல வாரிய சங்கத்தில் பதிவு செய்த கட்டுமாண தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை, கள்ளிக்குடி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தைப்பொங்கலையொட்டி கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி கவணம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் (நாடார் சரஸ்வதி தொடக்கப்;பள்ளி) கட்டுமான நல உறுப்பினர்களுக்கு இன்று 3வது நாளாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற காலை 6மணி முதலே கட்டுமான தொழிலாளர்கள் பள்ளி முன்பு குவிந்தனர். அதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். சுமார் 2கிலோ மீட்டர் தொலைவில் வரிசையில் காத்திருந்த நிலையில் சாரல் மழையால் அனைவரும் குடையுடன் வரிசையில் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுச் சென்றனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தில் பல்லாயிரக்கணக்காணோர் பதிவு செய்திருக்க பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க நான்கு நாட்கள் மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளதால் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com