Home செய்திகள் சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கடையநல்லூர் எம்எல்ஏ வலியுறுத்தல்…

சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கடையநல்லூர் எம்எல்ஏ வலியுறுத்தல்…

by mohan

இந்தியாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.சிறுபான்மை சமுதாயத்தின் முக்கிய பிரச்சினைகளான கல்வி உதவித்தொகை,10சதவீத இடஒதுக்கீடு, தமிழ்நாடு அரசின் உருது அகாடமி, காவல் நிலையத்தில் முஸ்லிம் துணை ஆய்வாளர் நியமித்தல், வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991, வட்டியில்லா வங்கி, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை,47முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை, குடியுரிமை திருத்தச்சட்டம், லவ் ஜிஹாத்,பசுவதை தடை சட்டம் (கவ்ராக்ஷா) என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடுமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் சென்னையில் உள்ள இந்திய அரசின் கேம்ப் அலுவலகத்தில் மத்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் கௌரவ துணைத் தலைவர் ஆதிப் ரஷீத் திடம் கோரிக்கை மனு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.மேலும்,நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய – மாநில அரசு வேலை மற்றும்கல்வி நிலையங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடுவழங்க வேண்டும். பிரதமரின் 15 அம்ச திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிறுபான்மையினர் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களில்அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்திட சிறுபான்மை சமுதாயத்தினருடனான விழிப்புணர்வு பணிகள் பரவலாகநடத்தப்பட வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான ஆய்வுக் கூட்டங்கள் மாநில-மாவட்ட அளவில் நடக்கும் போதுசிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டிப்பாக அழைக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் உருது மொழி மேம்பாட்டிற்கு கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால்தமிழ்நாடு அரசின் உருது அகாடமி கடந்த ஒன்பதரை வருடங்களாக செயலிழந்துள்ளதை இங்கே சுட்டிகாட்டுவதோடுஉரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். காவல் நிலையங்களில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அநீதி இழைக்கப்படுவதை தடுத்திட பல்வேறு ஆணையங்கள்பரிந்துரைத்தபடி அனைத்து காவல் நிலையங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையாவது காவல்துறை துணை ஆய்வாளர் பணி அந்தஸ்தில் நியமிக்கப்பட வேண்டும். இந்தியாவில் பராமரிப்பின்றி, பலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்து முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான பணிகள் நடை பெற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் மூடப்பட்டிருக்கும் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும்(கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள்) திறந்து வழிபடுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் – 1991 (Protection of Place of worship Act-1991)குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசாணை வெளியிட்டு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதன்மூலமே அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க முடியும், துவேஷ பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மதநல்லிணக்கத்தை நிலைநிறுத்த முடியும். பொருளாதாரத்தில் அனைத்து மக்களும் முன்னேற்றம் அடைந்திட வட்டியில்லா வங்கி நடைமுறையை இந்தியநாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப் போற்றப்படும் இந்திய நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் சட்டமன்ற – பாராளுமன்றங்களில் போதிய பிரதிநிதிதுவத்தை பெற்று அடிமட்டத்திலிருந்து ஜனநாயகத்தைவலிமைப்படுத்திடும் வகையில் இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் விஷேச காலங்களில் அரசு அறிவிக்கும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை வாய்ப்பு பலமுறை முஸ்லிம்சிறை வாசிகளுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவு மாநில ஆளுநருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே பரிந்துரை செய்து சிறைவாசிகளை விடுவிக்க முழுஅதிகாரம் இருக்கின்றது. இதன்படி 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரையும் சாதி,மத, வழக்கு வித்தியாசமின்றி கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டுவதோடு, தமிழ்நாடு சிறைச் சாலைகளிலுள்ள47 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீதுள்ள முதல் தகவல் அறிக்கை(எப் .ஐ.ஆர்.) அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். லவ் ஜிஹாத், பசுவதை தடை சட்டம் (கவ்ராக்ஷா) என்ற பெயரால் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு கொடூரமானமுறையில் சிறுபான்மை சமுதாயத்தினர் திட்டமிட்டு தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்திய மனித வர்க்க சாஸ்திரம் (Anthropological Survey of India) தகவலில் இந்தியாவில் 4924 சமூகத்தினர் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து சமூகங்களின் தனித் தன்மை,கலாச்சாரம், கண்ணியம் காக்கப்படுவதின் மூலமே இந்திய நாட்டின் பெருமை உலகில் நிலைத்து நிற்க முடியும். இதைஉறுதி செய்திடும் வகையில் ஆட்சியில் உள்ளவர்கள் வெறுப்புணர்வை தூண்டுவதையும், ஜாதி மத துவேஷங்களைபரப்புவதையும் கடும் சட்டங்கள் கொண்டு வந்து சிறுபான்மை சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையாகும். மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கடையநல்லூர் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com