
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வருபவர் ராஜன்(45). இவரது தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி காவல்நிலையத்தில் டிஎஸ்பி ராஜன் தூண்டுதலின் பேரில் இரண்டு வழக்கறிஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்தததை கண்டித்து வழக்கறிஞர் சங்க தலைவர் வீரபிரபாகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியான வந்து உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், தமிழக அரசு டிஎஸ்பி ராஜனை உடனடியாக பணியிடை மாற்றக் கோரியும் கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.