வாக்கு எண்ணும் மையங்கள்;மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் உள்ளதா, வாக்கு எண்ணும் மையங்களை எங்கெங்கு அமைப்பது என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து வருகிறது.இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எப்படி கொண்டு வரவேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கான குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியா் ம.ஸ்ரீதேவி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பரிமளா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்