58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சார்பில் களப் பணிகள் மேற்கொள்ள பட்டது.

உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட மராமத்து பணிகள் நடந்து வருவதால் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சார்பில் களப் பணிகள் மேற்கொள்ள பட்டது.3 முறை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ள வில்லை , அதே போல மூணாண்டிபட்டி மலை அடிவாரத்தில் உள்ள சிறிய அளவிலான தொட்டிப்பாலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டும் அங்கங்கே கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதைந்து இருக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என 58 கிராம இளைஞா்கள் குழுவின் சாா்பில் சௌந்திரபாண்டியன் தொிவித்தாா்.

உசிலை சிந்தனியா