
2021 சட்டமன்ற தேர்தல் தமிழகமெங்கும் இப்போதிருந்தே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டி தொகுதி குறித்தும் அடுத்து உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. பா.நீதிபதி, உசிலை நகர செயலாளர் பூமா.கே.ஆர்.ராஜா, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ்-ன் மகனும் தற்போதைய ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துரை.தனராஜன் என மூன்று பேரை தேர்வு செய்து தந்தி டிவி என்ற தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டது.இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியானதிலிருந்து தற்போதைய உசிலை எம்.எல்.ஏ. பா.நீதிபதி உடன் வெளியான இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாக எம்.எல்.ஏ. சார்ந்த விழாக்களுக்கு ஒதுக்கி வைத்து வந்ததாகவும்,கடந்த சில நாட்களாக அவர்களை எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படுவது இல்லை என்ற ஒரு பேச்சு உசிலம்பட்டியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கருத்துக்கணிப்பில் வெளியானதை வைத்து உடன் பயணித்து வந்த அதிமுக நிர்வாகிகளை எம்.எல்.ஏ. ஓரம் கட்டியிருப்பதால் உசிலை அதிமுகவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதே நிலை தொடா்ந்து நீடித்தால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மெல்ல மெல்ல அதிமுக கையை விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.இவ்வருடம் எளிதில் அதிமுக வெல்லக்கூடிய தொகுதியான உசிலம்பட்டியில் தற்போது நிலவும் குழப்பத்தை கண்ட திமுகவினா் தங்கள் கனப்பணியை மும்மரப்படுத்தியுள்ளனா்.
You must be logged in to post a comment.