Home செய்திகள் எம்எல்ஏவின் பினாமி பணத்தை கையாடல் செய்ததாக அவரது உதவியாளர், மனைவியை கடத்தி சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்.

எம்எல்ஏவின் பினாமி பணத்தை கையாடல் செய்ததாக அவரது உதவியாளர், மனைவியை கடத்தி சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் முருகன் (42). இவர் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ நீதிபதியிடம் கடந்த 15வருடங்களாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். எம்எல்ஏ நீதிபதிக்கு அரசு ஒப்பந்த பணிகளில் லஞ்சமாக பெறும் பணம் இவர் மூலம் நீதிபதிக்கு சென்றடைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் எம்எல்ஏ நீதிபதியின் அடியாட்கள் வீட்டுக்கு வந்து முருகனையும், அவரது மனைவி சுகந்தியையும் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலையில் சென்ற மகன் முருகன், மருமகள் சுகந்தி மாலை வரை வீடுதிரும்பாத நிலையில் இருவரையும் நீதிபதியின் அடியாட்கள் அழைத்துசென்றதாக கூறினர். இது குறித்து முருகனின் தந்தை ராமர் தனது மகன், மருமகளை எம்எல்ஏ நீதிபதி பணம் கேட்டு கடத்தி சென்றுளளதாகவும், எம்எல்ஏ நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முருகன், அவரது மனைவி சுகந்தி ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.அதன் பின்பு தான் எம்எல்ஏ நீதிபதியின் திள்ளுமுள்ளு வெளிச்சத்திற்கு வந்தது.காவல் நிலையத்திற்கு வந்த முருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார் வாக்குமூலத்தில் நேற்று இரவு இரண்டு சூட்கேஸ்களில் ரூ.70லட்சம் வீதம், 1கோடியே 40லட்சம் பணத்தை ஒருவரின் மூலம் முருகனிடம் கொடுத்து கையாடல் நடந்ததாகவும், அவரும் சூட்கேசை வாங்கி சென்று சரியான இடத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பணத்தை பெற்றவர்கள் நீதிபதி முன்னிலையில் எண்ணப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த பணத்திலிருந்து ரூ.44லட்சம் பணம் மட்டும் காணாமல் போனதாக கூறி முருகனை முருகனிடம் விசாரித்த எம்எல்ஏவின் அடியாட்கள் பணத்தை கேட்டு முருகனையும், அவரது மனைவிiயும் நீதிபதியின் வீட்டில் அடைத்து வைத்து பணத்தை கேட்டு சித்ரவதை செய்து அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முருகன் வலி தாங்காமல் பணத்தை எடுத்துததாக ஒப்புக்கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜனும் அங்கு சென்று முருகனை மிரட்டியும், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்படிதரவில்லை என்றால் உன்மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஜெயிலில் தள்ளிவிடுவதாகவும் முருகனை டிஎஸ்பி ராஜன் மிரட்டியதாக கூறினார். மேலும் முருகன், மற்றும் மனைவி சுகந்தி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் சேர்க்கபட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக எம்எல்ஏ நீதிபதி பணம் கேட்டு, தம்பதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!