உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையால் பருத்தி சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் செடியிலேயே விடும் அவலம். விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அயன்மேட்டுபட்டி, சந்தைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் 3ம் கட்டமாக பருத்தியை பயிரிட்டு விவசாயம் செய்து வரும் நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்சாரல் மழை பெய்து வருவதால் பருத்தி செடியில் உள்ள பருத்திப் பஞ்சுகள் அனைத்தும் மழையால் நனைந்து சேதாமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பருத்திகளை சாகுபடி செய்யாமல் செடியிலேயே விடுகின்றனர். ஆனால் உசிலம்பட்டி கமிஷன் கடைகளில் 1கிலோ பருத்தி ரூ40 முதல் ரூ50 வரை பருத்தி விற்பனை நடைபெறுவதால் உரிய விலை கிடைத்திருக்கும் நேரத்தில் தொடர் மழையால் பருத்திகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உசிலை சிந்தனியா