
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம். இக்கிராமத்திலுள்ள சக்தி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் இடம் கண்மாய்க்கரை அருகில் உள்ளது.இந்த இடத்தை இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இடத்தின் வழியாகத்தான் விநாயகர் கோவிலுக்கோ கிராம பொது மயானத்திற்கோ செல்ல முடியும்.அவ்வாறு இப்பாதையில் செல்பவர்களை ராஜா அடியாட்களைக் கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள்; கோவில் இடத்தை ஆக்கிரமித்து கிராம மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சம்பவமறிந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.கிராம மக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சம்மந்தப்பட்ட நபர் மீது உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் உடனடியாக லழக்குப் பதிவு செய்யவும் ஆக்கிரமிப்பாளருக்கும் நோட்டிஸ் அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.இதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
You must be logged in to post a comment.