உசிலம்பட்டி அருகே வடகாட்டுபட்டியில் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி கிராமத்தில் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி தீயணைப்பு துறை அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொரோனாவிற்கு அரசு விதிக்கப்பட்ட விதிமுறைகளையும், பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தினர்.

.உசிலை சிந்தனியா