கீழக்கரையில் தொடர் போதைப்பொருள் சோதனை பொதுமக்கள் மகிழ்ச்சி…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் அதிகமாக இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டு வருகிறார்கள். இப்பகுதிகளில் அரசு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை, ஆன்ஸ், பான் மசாலா போன்ற போதைப்பொருட்களை இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இதை தொடர்ந்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் உத்தரவின்படி உட்கோட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில், தலைமை காவலர் கலை மன்னன், காவலர் சௌந்தரபாண்டி, காவலர் ஜெயகணேஷ், கீழக்கரையில் இருக்கும் அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை செய்து பல கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றார்கள்.

இதைப்பற்றி மஹ்தூமியா மேல்நிலை பள்ளி தாளாளரும் சமூக ஆர்வலருமான இப்திகார் ஹசன் கூறியதாவது, “கீழக்கரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவர் முதல் இளைஞர்கள் வரை இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். போதைப்பொருள் சோதனை கீழக்கரையில் தொடர்ந்து நடைபெற வேண்டும். இல்லையெனில் இப்போதை பழக்கத்தை விட்டு இளைஞர்கள் மாறுவது மிகவும் கடினமாகிவிடும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிக கவனமுடன் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் சோதனையால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு