
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூரை அடுத்துள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் ரமேஷ்(21).இவரை சாப்டூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் வாழைத்தோப்பு மலை உச்சியில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். ரமேஷின் உறவினர்கள், கிராம மக்கள் போலீசார் துன்புறுத்தியதால் இறந்த்தாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரமேஷின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழக அரசு நிதி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்ய வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்த நிலையில் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் சாந்தி முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக சாப்டூர் காவல் நிலைய இரு எஸ்ஐகள் பரமசிவம்,ஜெயகண்ணன் ஆகிய இருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார் தெரிவித்தார். ஆனாலும் அணைக்கரைப்பட்டியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் ஆர்டிஓ தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். பேச்சுவார்த்தையில் இறந்த ரமேஷின் குடும்பத்துக்கு பசுமை வீடு 3 லட்சம் மதிப்பில் 2 லட்சம் மதிப்பில் காலி இடமும் மற்றும் ரமேஷின் தந்தைக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் ரமேஷின் பிரேத பரிசோதனை உடல் கூறுகளை முடிவு வைத்து காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அணைக்கரைப்பட்டி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவசரஅவசரமாக அணைக்கரைப்பட்டி மயானத்தில் புதைக்கப் பட்டது இதில் சந்தேகம் இருப்பதாக மதுரை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு மதுரை கோர்ட் உத்தரவுபடி இன்று மீண்டும் ரமேஷின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது மருத்துவர்கள் செல்வமுருகன் பிரசன்னா தாசில்தார் சாந்தி டிஎஸ்பி மதியழகன் மற்றும் வருவாய்த்துறையினர் ரமேஷின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.