Home செய்திகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஒருசில அரசு பேருந்துகளும் பழுதாகி நிற்பதால் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.

உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஒருசில அரசு பேருந்துகளும் பழுதாகி நிற்பதால் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.

by mohan

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தேவைப்படும் அளவிற்கு பேருந்து இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதனைதொடர்ந்து பேருந்துகள் அனைத்து பகுதிகளிலும் இயங்கிவருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமணையிருந்து பேருந்து நிலையம் வழியாக டி.கல்லுப்பட்டி, எழுமலை, திருமங்கலம், டி.கிருஷ்ணாபுரம், பேரையூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மட்டும் 15க்கும் மேற்ப்பட்ட அரசு பேருந்துகள்இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்துகளில் பயனிகள் கூட்டம் அதிகரிப்பதோடு, கூட்டநெரிசலுடன் பயணிpக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளும் பழுதாகி நிற்பதால் பயனிகள் உரிய நேரத்தில் செல்லவேண்டிய பகுதிகளுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் பேருந்து நிலையத்திலேயே அடுத்த பேருந்து வரும்; வரை பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது குறைந்த அளவிற்கே பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும்,சுழற்ச்சி (ஸ்பிட்) முறையில் Nபுருந்து இயக்கவும் மறு உத்தரவு வரும்வரை இதே பேருந்துகள் தான் இயக்கபடும் என தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!