Home செய்திகள் உசிலம்பட்டியில் முகக்கவசம் அணியாதவா்களை பிடிக்க அரசு சாா்பில் பறக்கும் படை தயாா்.

உசிலம்பட்டியில் முகக்கவசம் அணியாதவா்களை பிடிக்க அரசு சாா்பில் பறக்கும் படை தயாா்.

by mohan

உலகத்தையே அசசுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தனி மனித ஒழுக்கமே தீா்வாகும்.ஆனால் பொதுமக்கள் இதை கடைபிடிப்பதில்லை.

இதை தடுக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் ஆணையாளா் அழகேஷ்வாி சுகாதாரத்துறை அதிகாாிகள் ஏற்ப்பாட்டில் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒருவரும் நகராட்சி அலுவலகத்திலிருந்து இருவரும் காவல்துறையில் இருந்து ஒருவரும் என அரசு சாா்பில் குழு அமைத்து பறக்கும் படை என பெயர் அமைத்து உசிலம்பட்டி பகுதிகளில் காய்கறி சந்தை பூ மார்க்கெட் தேனி ரோடு வத்தலகுண்டு ரோடு கறிக்கடை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று முக கவசம் அணியாமல் வியாபாரம் பார்க்கும் வியாபாரி மற்றும் முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றி வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதத் தொகையாக ஒரு நபருக்கு 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராஜன் வருவாய் ஆய்வாளர் அய்யாவு பரப்புரையாளர் கிருஷ்ணசாமி தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் பாண்டி துப்புரவு மேற்பார்வையாளர் தனிக்கொடி காவல்துறை சார்பில் பிரகாஷ் ஆகியோர் ஒரு குழுவாக அமைத்து முககவசம் அணியாமல் சுற்றி திரியும் பொதுமக்களுக்கும் கடைக்காரர் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இதனையும் மீறி சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!