உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அமைச்சாிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி மன்றதலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக   தலைவர் அஜித்பாண்டி தலைமையில் அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாரை  சந்தித்து மனு அளிக்கப்பட்டது..தமிழக அரசின் புதிய பேக்கஜிங் டெண்டர் முறையால் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளது.எனவே புதிய டெண்டர் முறையை அரசு கைவிட வேண்டும்.நிதிக்குழு மானியங்களில் மாநில அரசு தலையிட கூடாது.பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்த வேண்டும்.நூறு நாட்கள் வேலை பணியாளர்களுக்கு அரசு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களில் ஊராட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது..இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பு செயலாளர் சின்னச்சாமி பொருளாளர் விமலா சுசேந்திரன் உள்பட ஊராட்சி மன்றறத்தலைவா்கள் கோஸ்மின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..