Home செய்திகள் உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

by mohan

உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் பானுகோபன் தலைமையில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவதற்கும் , அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் விழா கமிட்டியினர், பொதுமக்கள், இளைஞர்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் விதம், சிலைகள் வைக்கும் இடம், வெடி வெடிப்பது, ஒலி பெருக்கி உபயோகிப்பது, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வது போன்ற பல்வேறு கட்டுபாடு, விதிமுறைகளை உசிலம்பட்டி கோட்டாட்சியர் பானு கோபன் எடுத்து கூறினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி காவல் துணை கண்கானிப்பாளர் ராஜா, வட்டாட்சியர் செந்தாமரை, எஸ்ஐ சிவபாலன், மனிமொழி, விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறையினர், அனைத்து கிராம விஏஓக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!