உசிலம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்பொழுது உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியில் பாண்டியராஜன் (44) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.அவரிடமிருந்து 22கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக பாண்டியராஜனை கைது செய்த உசிலம்பட்டி நகர் காவல்நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா