Home செய்திகள் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிப்பு .

செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிப்பு .

by mohan

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து துறைஅலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திர கலா தலைமையில் சட்டம், ஒழுங்குமுன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுத்த முடிவுகளின் படி,தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் நலன் கருதி, பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம், பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் செப். 11 ல் அஞ்சலி செலுத்த வர அனுமதி இல்லை. பதிவு பெற்றஅரசியல் கட்சி தலைவர்கள் (5 பேருக்கு மிகாமல்) கலெக்டரிடம் முன் அனுமதி, வாகன முன் அனுமதி பெற்று அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி பின்பற்றி மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்பும்அரசியல் கட்சித் தலைவர்கள் செப்.7க்குள் ராமநாதபுரம் கலெக்டரிடம் நேரில் அல்லது மின்னஞ்சல் ( [email protected] ) மூலம் விண்ணப்பிக்கலாம். கலெக்டரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருவோர் தங்கள் சொந்தவாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாகன மேற்கூரையில் பயணிக்கக்கூடாது. அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடக்கூடாது. ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லக்கூடாது சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசக பேனர்களை கட்டி வரவோ, கோஷம் எழுப்பவோ கூடாது.அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்வதுடன், வரும் வழியில்போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.கலெக்டரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்குஒதுக்கிய நேரத்தில் மட்டும் வந்து செல்ல வேண்டும். சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சி ,விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல், ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. கலெக்டரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளிகடைபிடித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும்.இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கடந்த ஆண்டைப்போன்றே, நடப்பாண்டு விழா அமைதியானமுறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com