உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு காவல்துணை கண்காணிப்பாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராஜன். இவர் உசிலம்பட்டி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபரிடம் லஞ்சம் பெற்றுகொண்டு வழக்குபதிவு செய்யாமலும், அவர்களுக்கு துணை போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வழக்குபதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் கேட்கும் போது அவர்களை அவமதிப்பு செய்வதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனை கண்டித்து உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக சென்று உசிலம்பட்டி தேவர்சிலை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஎஸ்பி ராஜனை கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டன.வழக்கறிஞர்களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா