உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் மற்றும் அவருக்கு லாட்டரி விநியோகம் செய்த இருவர் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் அமோக விற்பனை நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் மதுரை தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உசிலம்பட்டி பேருந்து நிலைய பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஞானமுருகன்(45) என்பவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு லாட்டரி விநியோகிஸ்தர்களாக செயல்பட்டு வந்து தேனி மாவட்டம் பிசிபட்டியை சேர்ந்த சக்தி (33) மற்றும் என்ஆர்டி நகரை சேர்ந்த கிருஷ்ணன்(45) ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5லட்சத்தி 27ஆயிரம் ரூபாயும், 5லட்சத்தி 21ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலைசிந்தனியா