இராமநாதபுரம் அருகே பள்ளத்தில் கார் விழுந்து விபத்து..

இராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் கடந்த பல வருடங்களாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இவ்வழிகளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பல பள்ளங்கள் தோண்டப்படுகிறது.

இந்நிலையில் இன்று (05/07/2021) அப்பகுதியில் RSமடையை சார்ந்த பால்சாமி என்பவர் வாகனம் ஓட்டி வந்த பொழுது திடீரென தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனம் விழுந்தது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் ஓட்டுனர் மீட்கப்பட்டார்.  இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டங்களைப் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

image:- MatrixMedi