உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற தேர்தல் அலுவலர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மூடி வைத்தார். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன் வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் குத்துவிளக்கு ஏற்றினார்.இதில் உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன், நகர செயலாளர் பூமா ராஜா, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரை தனராஜன், பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் முருகன் ஜி, ஒன்றியச் செயலாளர்கள் எம்.வி.பி ராஜா, பிச்சை ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் டிஆர் பால்பாண்டி, செல்லம்பட்டி அவைத் தலைவர் பண்பாளன் மற்றும் ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா