உசிலம்பட்டி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் தமைமையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காணொலி இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு காணொலியை சரியாக செயல்படுத்த முடியாமலும், அதிகாரிகளும் போதிய பயிற்சிகள் இல்லாததாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் அரங்கத்தில் அமர்ந்து காத்திருந்தனர். அதற்கு பிறகு சரிசெய்யப்பட்டு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்ட நிலையில் ஒரு வட்டாரத்திலிருந்து 2 விவசாயிகள் மட்டுமே மாவட்ட ஆட்சியரிடம் பேச அனுமதி அளித்ததால் கூட்டத்திற்கு வந்த மற்ற விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுக்களும் அதிகாரிகள் எந்தவித பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறி பாதயிலேயே கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை சரிவர நடத்த நடவடிக்கை எடுக்க சேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

உசிலை சிந்தனியா