Home செய்திகள் ப்ளாக்பாரஸ்ட் பிறந்த நாள் கேக்குக்கு பதிலாக சாதாரண கேக். வாடிக்கையாளர் அதிர்ச்சி.

ப்ளாக்பாரஸ்ட் பிறந்த நாள் கேக்குக்கு பதிலாக சாதாரண கேக். வாடிக்கையாளர் அதிர்ச்சி.

by mohan

உசிலம்பட்டியில் வாடிக்கையாளர் காஸ்டிலியான பிறந்த நாள் ப்ளாக்பாரஸ்ட் கேக் ஆர்டர் செய்ய அதற்கு பதில்; சாதாரண கேக்கை கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பேக்கரியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்புதூரில் வசித்து வருபவர் அலெக்ஸ்பாண்டியன் (38) – முத்துலெட்சுமி (29) தம்பதியினர். இந்த நிலையில் முத்துலெட்சுமி தனது தம்பி மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக உசிலம்பட்டியில் உள்ள தனியார் (வாணி ஸ்வீட்ஸ் பேக்கரி ) பேக்கரியில் அரைகிலோ எடையில் ப்ளாக்பாரஸ்ட் கேக்கை ரூ.350க்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆர்டர் கொடுத்த கேக்கை வாங்குவதற்காக பேக்கரிக்கு அலெக்ஸ்பாண்டியன் தம்பதியினர் இன்று மதியம் 2மணியளவில் சென்றுள்ளனர். அப்போது ப்ளாக்பாரஸ்ட் கேக் தயார்செய்யப்பட்டு பார்சல் செய்து கடை ஊழியர்கள் அவரிடம் பணத்தை பெற்றுகொண்டு கேக்கை கொடுத்தனர். அதனை வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்ற தம்பதியினர் மதியம் 2:30 மணியளவில் வீட்டில் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ப்ளாக்பாரஸ்ட் கேக்குக்கு பதிலாக சாதாரண கேக் ( உள்ளே சாதாரண கேக்கிற்கு உபயோகபடுத்தப்படும் பொருட்கள்) இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதனைதொடர்ந்து கேக்குடன் தனியார் பேக்கரிக்கு சென்று இது குறித்து தம்பதியினர் முறையிட்;டனர். ஆனால் அதுக்கு கடை ஊழியர்கள் நேற்றைய கேக் மாஸ்டர் போட்ட கேக் இது அதனால் இதனை அவரிடம் தான் கேட்க வேண்டுமென அலட்சியமாக பதில் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் தவறை திருத்திகொள்ளாமல் அலட்சியமாக பதில் கூறுவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை இல்லையே என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேக்கரியில் ப்ரீஜ்ஜில் உள்ள அனைத்து ப்ளாக் பாரஸ்ட் கேக்குகளை என்னிடம் கொடுங்கள் அதற்கான பணத்தை நான் தருகின்றேன். ஆனால் உங்கள் முன் பிரித்துபார்ப்பேன் இது ப்ளாக்பாரஸ்ட் கேக்காக இல்லாவிட்டால் நான் கூறுவதை நீங்கள் கேட்க தயாரா என கேட்டதற்கு ஊழியர்கள் மழுப்பலாக பதில் தெரிவித்தனர். இது குறித்து அலெக்ஸ்பாண்டியன் உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் தனியார் பேக்கரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.மிகப்பெரிய பேக்கரி கடை என்றால் யார் எதை கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் கேட்கமாட்டார்கள் என்ற நினைப்பில் பல பெரிய பேக்கரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு சில வாடிக்கையாளர்களால் தான் அவர்களின் தவறுகள் அவ்வபோது வெளிப்படைக்கு வருகிறது.உணவுபாதுகாப்பு துறை என்ற துறையை அரசால் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவங்களால் அத்துறை செயல்படுகிறதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com